Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு ஒருநாள் கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவு!

ஊரடங்கால் கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1,359 இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தி 55 நாட்கள் ஆகும் நிலையில் இந்த நாட்களுக்கு வாடகை கட்டணம் செல்லும் நிலைக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் ஒரு நாள் கட்டணமாக, நான்கு சக்கர வாகனங்களுக்கு – 50 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு – 40 ரூபாயும், மற்றும் மிதிவண்டிகளுக்கு – 15 ரூபாய் மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |