Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரூ.50,000க்கு மேல கொண்டு போகாதீங்க…! மீறினால் நடவடிக்கை பாயும்…. நாகையில் தீவிர சோதனை …!!

நாகப்பட்டினம் அருகே தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளுடன் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோதனைச் சாவடியில் இரவு நேரங்களில் அதிக அளவில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி யசோதா தலைமையிலான காவல்துறையினர் மேலவாஞ்சூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் நாகப்பட்டினம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில்  ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே தேர்தல் குழுவினர் வாகனங்களை அனுப்பி வைத்தனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |