கொரோனாவின் விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 25 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர் இவ்வாறு தேவை இல்லாமல் வெளியே சுற்றக் கூடாது என்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்