தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் அடக்கம். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் 31 ஆம் தேதி வரை பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி மருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டும் என்றும், அதேபோல பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் முறையான பரிசோதனைக்கு பிறகே எல்லைக்குள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் கொரோனா தொடர்பாக ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#TN_Together_AgainstCorona #Corona #TNGovt pic.twitter.com/H58TtmAHU7
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 20, 2020