சேலம் அரசு மருத்துவமனை முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் 500 – க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காத நிலையில் நோயாளிகளை காண்பதற்கு அவர்களின் உறவினர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்படுகிறது.
இதனால் அரசு மருத்துவமனை முன்புறத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை இருக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே, காவல்துறையினர் அரசு மருத்துவமனை முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை கோட்டை பகுதியில் இருபுறம் அமைந்திருக்கும் சாலைகளில் நிறுத்திக் செல்கின்றனர்.