Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் மேலே பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்…. கடலூரில் பரபரப்பு….!!

அதிவேகமாக வந்த கார் வீட்டின் மேலே பாய்ந்து விபத்து ஏற்பட்டு 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள அகரம் மெயின்ரோடு பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக மகேஷ் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார், கார்த்திக், சதீஷ், சாந்தி, கஜம் மூர்த்தி ஆகிய 7 பேரும் காரில் சென்றுள்ளனர். அப்போது காரை மகேஷ் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து கரிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதிய வேகத்தில் திரைப்படங்களில் பறப்பது போன்று அருகில் இருந்த வீட்டின் மீது பாய்ந்து தலைகீழாக தொங்கி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்ததால் அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் மகேஷ் உள்பட 7 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களை வீட்டின் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருகளுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |