Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில்  தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்று கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மண்டல ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, திலகராஜ், பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாந்தி, சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹோட்டல்கள், பழ கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள், செல்போன் கடைகள், ஆகிய கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர் ஆகியோர் கொரோனா தடுப்பு விதிகளைப் முறையாக பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத 3 கடைகளுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல்  14 பேரிடம்  முககவசம் அணியாததிற்கு ரூபாய் 200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |