Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் ….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு ….சோகத்தில் குடும்பத்தினர்

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் பகுதியில் ராஜா தெருவை சேர்ந்த திவாகர் என்பவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த திவாகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இதைக்கண்ட அவருடைய  சகோதரி பிரபாவதி கதறி அழுதார் .இதுகுறித்த தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த திவாகரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |