மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டு என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு அஜித் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறில் பட்டு, வேல்முருகன் விட்டு பிரிந்து தனது மகனுடன் தற்போது தனியாக வசித்து வருகின்றார். இவருடைய மகன் அஜீத் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் அங்கு கொரோனா தொற்றினால் வேலை இல்லாததால் தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். அங்கு சென்ற அஜித் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் அஜீத் தனது தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அஜித்தின் தாயான பட்டு தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்தஅலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அஜீத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.