வேலை நேரத்தில் படுத்து தூங்கிய மருத்துவர் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் Fairfield மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் Dr Raisah Sawati என்னும் இளம்பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்பட்ட போதோ அல்லது நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் போது Dr Raisah Sawatiயின் கையெழுத்திற்காகவோ அனைவரும் அவருக்காக காத்திருந்துள்ளனர். ஆனால் மருத்துவர் வர தாமதமானதால் உடனே ஒலிபெருக்கி மூலம் அவருக்கு நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டது.
இருப்பினும் அவர் வராமல் இருக்கவே செவிலியர் ஒருவர் Dr Raisah Sawatiயை தேடிச் சென்றுள்ளார். அங்கு அப்போது Dr Raisah Sawati பெண்கள் உடை மாற்றும் அறையில் மின் விளக்குகளை அணைத்து விட்டு ஒரு பெஞ்சில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் மீது மருத்துவத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில் இது போன்று Dr Raisah Sawati தூங்குவது முதல் முறை அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ஒருவருக்கு உதவுவதாக கூறிவிட்டு இருட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார்.
மேலும் ஒரு குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அதனை காப்பாற்றியதாக பொய் உரைத்துள்ளார். இதனை தொடர்ந்து சுவாச கோளாறு ஏற்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கத் தவறியுள்ளார். இதனையடுத்து Dr Raisah Sawati தனது கல்வித்தகுதி குறித்தும் பொய் கூறியுள்ளார். இது போன்ற அவர் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ ஆணையம் Dr Raisah Sawati மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு எதிராக Dr Raisah Sawati மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.