வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்மனந்தல் ஊராட்சி குச்சிப்பாளையம் கிராமத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது புண்ணியமூர்த்தி என்ற தொழிலாளி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து புண்ணியமூர்த்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.