வேலை தேடி வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் யூரோ வழங்கப்படும் என்று பிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள பல்வேறு இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் சொந்த நாட்டிலேயே தொடர்ந்து வேலையும் தேடி வருகின்றனர். இதுபோன்று பிரான்சில் நெடுங்காலமாக வேலை தேடும் நபர்கள் அது தொடர்பான நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். மேலும் அவர்கள் எந்த வேலைக்காக பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ அது தொடர்பான நிறுவனத்தில் வேலைக்காக பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று பிரான்ஸ் தொழில் துறை அமைச்சரான Élisabeth Borne கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதில் ” நெடுங்காலமாக வேலை தேடிக்கொண்டு இருப்பவர்கள் Pôle Emploiவில் பதிவு செய்திருந்தால், அவர்கள் தேடிய வேலை தொடர்பான பயற்சி அளிக்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக ஆயிரம் யூரோ வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். குறிப்பாக பயிற்சியின் தொடக்கத்தில் பாதி தொகையும் பயிற்சியின் இறுதியில் மீதி தொகையும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.