Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சீக்கிரமா வேலை வாங்கி தருகிறேன்” ஏமாற்றமடைந்த பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிமில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் வசிக்கும் ஜோஸ்வா என்பவர் ஜெயப்பிரியாவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 1 1\2 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து ஜெயப்பிரியா ஜோஸ்வாவிடம் பலமுறை கேட்டபோது வேலை சீக்கிரம் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெயப்பிரியா அவரது அண்ணன் சந்திரசேகரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் சிவக்குமாரிடம் கேட்டபோது வேலை சீக்கிரம் வாங்கி தருகிறேன் அல்லது பணத்தை திருப்பி தருகிறேன் என கூறியுள்ளார். இப்படி பலமுறை சொல்லவே சந்திரசேகர் ஏமாற்றப்பட்டதை அறிந்து பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜோசுவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |