Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலையில் இருந்து நீக்கியதை கண்டித்து …. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!

சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து சிஐடியூ மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையின் முன்பாக கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சிஐடியு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவரான ராமராஜன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்து உள்ளார்.

இதையடுத்து சிஐடியு மாவட்ட தலைவர் சீனி.மணி, மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட துணை செயலாளரான  ராமானுஜம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். கடந்த 7 வருடங்களாக குத்தாலம் தாலுக்கா கருப்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்த  தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்தும், மீண்டும் நீக்கப்பட்ட தொழிலாளர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தியம்  ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கருப்பூர் கிளை பொறுப்பாளர் பாஸ்கரன் நன்றி  கூறினார்.

Categories

Tech |