Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையின்மையால் ஆடு திருட்டில் ஈடுபட்ட இளைஞர்..!!

சென்னையில்  ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது மனைவியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். சென்னை எண்ணூர் மீனவ கிராமங்களில் ஆடு காணாமல் போவதாக ஏற்கனவே புகார்கள் இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் சாலையிலிருந்து ஆடுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கார்த்தி ஸ்விகி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், அவரது மனைவி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து உள்ளதும் தெரியவந்தது. ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடுகளை திருடி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் அவருடைய உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு கார்த்தியை மற்றும் எண்ணூர் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |