விவசாயின் வீட்டில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார் குளம் பகுதியில் விவசாயியான முருகையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் வயலில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முருகையா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு பீரோவில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு அதிலிருந்த 30,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து ராமையா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இவ்வாறு கிராமத்தில் பகலில் அடிக்கடி திருட்டு நடக்கின்றது என்று கூறி ராமையாவின் வீட்டில் 30,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.