Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போது… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!!

வீட்டின் கதவை சாவி போட்டு திறந்து மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் தனது குழந்தைகளுக்கு பள்ளியில் புத்தகங்கள் வாங்கி கொடுத்துவிட்டு வேலைக்கு செல்வதாக மனைவியான ராஜேஸ்வரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரி வேலைக்காக வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை அங்குள்ள ஆட்டுக்கல் அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து கொண்டு கதவை சாவி போட்டு திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சுந்தர்ராஜ் மற்றும் ராஜேஸ்வரி வீடு திறந்து கிடப்பதை கண்டு உடனே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகை மற்றும் 42 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர்ராஜ் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மர்மநபர்களை கைரேகைகளை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |