Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போடா…! வீட்டிலேயே இருக்கியே…. தாய் திட்டியதால் மகன் வீபரீத முடிவு …!!

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை தாய் கண்டித்ததால் மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் துரைப்பழம். இவருக்கு 22 வயதுடைய சுடலை செல்வம் என்ற மகன் இருக்கிறார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்துள்ளார் ஆனால் அவருக்கான வேலை கிடைக்காததால் அவர் வீட்டில் வேலையில்லாமல் இருந்துள்ளார். சுடலை செல்வம் வேலைக்கு செல்லாததை அவரது தாயார் தங்கலதா கண்டித்துள்ளார். தங்கலதா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கலதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டில் வேலை இல்லாமல் இருந்த சுடலை செல்வத்தை கடுமையாக திட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் மனம் நொந்த சுடலை செல்வம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த தங்கலதா மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து வெள்ளிசந்தை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சுடலை செல்வத்தின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்குச் செல்லாமல் இருந்த மகனைத் தாய் கண்டித்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |