வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் உப்பு பண்டல் போடும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாடசாமி தனது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.
இதனால் அனுசியா உடனடியாக அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கு இன்று மாடசாமி வேலைக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுசியா, மாடசாமியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அனுசியா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாடசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.