Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு தான் சென்றேன்… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டில் இருந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்குளம் அம்மன் கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பையா பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு துரைசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துமாரி என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பையா பாண்டியன் வேலைக்கு கிளம்பியதும் துரைசெல்வி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சுப்பையா பாண்டி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இல்லாததை பார்த்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பையா பாண்டி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாயமான துரை செல்வி மற்றும் 2 குழந்தைகளையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |