வேலைக்கு சென்ற இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமப்பேர் மூப்பனார் கோவில் தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மகள் உள்ளார். இவர் கவரிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ரேணுகா மீண்டும் வீடு திரும்பாததால் பயந்து போன ஜெகநாதன் உறவினர்களின் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
ஆனால் எங்கு தேடியும் ரேணுகா கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜெகநாதன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தமிழரசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.