நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர் கணக்கில் பிஎஃப் வட்டி விகிதம் ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர்கள் கணக்கில் பிஎஃப் வட்டி 8.5% ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் பிஎப் வட்டி விகிதம் 8.5%-ல் 8.15% ஒரு தவணையாகவும், 0.35% இரண்டாவது தவணையாக வும் பிரித்து வரவு வைக்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது ஒரே தவணையில் வரவு வைக்கப்படும் என கூறியுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.