பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை இந்திராநகரில் சத்தியமூர்த்தி மகன் ராஜேந்திரன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் கட்டிட வேலைக்காக பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சந்தணகுமார் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டில் இருந்த பீரோவை சந்தணகுமார் மெதுவாக திறந்து அதில் இருந்த 3 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து சந்தணகுமாரை கைது செய்தார்.