Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாரியப்பன்…. அலுவலகத்திற்குள் கிடந்த சடலம்…. திருவாரூரில் சோகம்….!!

இ-சேவை மைய அலுவலகத்திற்குள் பணியாளர் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் தெற்குத் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் வடபாதிமங்கலத்தில் இ-சேவை மைய பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் மாரியப்பன் இ-சேவை மைய அலுவலகத்திற்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் இ-சேவை மைய அலுவலகம் சென்று மாரியப்பனை தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அலுவலகம் பூட்டி இருந்ததால் உறவினர்கள் ஜன்னல்வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது மாரியப்பன் இ-சேவை மைய அலுவலகத்திற்குள் கீழே விழுந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அலுவலக கதவை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மாரியப்பன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இ-சேவை மைய அலுவலகத்திற்குள் மாரியப்பன் இறந்து கிடந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரகின்றனர்.

Categories

Tech |