வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டபட்டி பகுதியில் அரியப்பன்-முருகம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருந்த விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.