ஓட்டலில் நுழைந்து தொழிலாளி பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நான்கு ரோட்டில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் தீபாவளியன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார். இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கடைக்கு வந்தபோது பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஓட்டல் உரிமையாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த 2 தினங்களுக்கு முன் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்த வாணியம்பாடியை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பணத்தை திருடிச் சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.