மருத்துவர் வீட்டில் 1 1/2 பவுன் தங்கம் மற்றும் ரு.3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகின்றார்.கடந்த 3ஆம் தேதி கோகுல் தனது வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து கோகுல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோகுலுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகு கோகுல் அரியலூரில் இருந்து கிளம்பி வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்து 1 1/2பவுன் தங்கம் மற்றும் ரூபாய் 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கோகுல் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்த சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.