விவசாயின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிச்சை தலைவன்பட்டி பகுதியில் விவசாயியான குற்றாலநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குற்றாலநாதன் மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து தனது வயலில் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை அப்பகுதியிலுள்ள ஜன்னலோரமாக மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து குற்றாலநாதன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற போது அங்கு வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 1/2 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து குற்றாலநாதன் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 1/2 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.