Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு அதற்குத் தீ வைப்பு…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருப்பது விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப்பில் முதலமைச்சர் திரு அம்ரிந்தர் சிங்கும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே டெல்லியில் இன்று காலை இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில் இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |