விவசாயப் பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில், தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் விவசாய அமைப்பு இணைந்து புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்பேஸ் மார்க்கெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் வேளாண் பொருட்களை தரகர்களின் தலையீடு இன்றி விற்பனை செய்ய முடியும் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஸ்பேஸ் மார்க்கெட் என்பது மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் பட்சத்தில் நடுவிலிருக்கும் இடைத்தரகர்கள் தவிர்க்க படுவார்கள்.
ஓட்டுனர்கள் மற்றும் விவசாயிகள் முழுமையான லாபத்தினை அடைவார்கள். இதற்காக சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் மற்றபடி விவசாயிகள் மட்டும் ஓட்டுனர்களுக்காகவே இந்த செயலியானது உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.