மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைவர் எனவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு சிதைத்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி பஞ்சாப்பில் இரண்டாவது நாளாக டிராக்டரில் பேரணியில் பங்கேற்றுள்ளார். பன்லாலா சவுத் பகுதியில் இருந்து பட்டியாலா வரையிலான 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி மேற்கொண்ட அவர் அங்கு பொதுமக்களிடையே உரையாற்றினார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைவர் எனவும், வேலை வாய்ப்புகளுக்கான அமைப்பையே மத்திய அரசு சிதைத்து உள்ளதால் எதிர்காலத்தில் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.