டெல்லியில் விவசாயிகள் 146 ஆவது நாளாக தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தற்போது 5 மாதங்களையும் தாண்டி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை அனைத்திலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 146 ஆவது நாளை எட்டியுள்ளதாகவும் சிங்கு, திக்ரி, காசியாபாத் போன்ற பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் போராடி வருவதாகவும் தெரியவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் வருகிற 26-ஆம் தேதி முதல் காலை அதிகாலை 5 மணியிலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது .