வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வு முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயதின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
முன்னதாக தெருக்கோடி பாவனையானது ஆலயத்தை சுற்றி நடைபெற்றது. இதேபோன்று சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 48வது ஆண்டு பெருவிழா பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடையாரில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.