கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.
நாடு முழுவதும் பரவியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் எந்த ஒரு செயல் பாட்டையும் முழுமையாக செய்வதற்கு வழி வகை செய்ய வில்லை. இதனால் ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு துறைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் பொதுப்போக்குவரத்து போன்றவை முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சில தளர்வுகளும் அரசு அறிவித்து வருகிறது.
ஆனால் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவின் கொடியேற்றம் முதன்முறையாக பக்தர்கள் இல்லாமல் தொடங்கப்பட்டு நடைபெற்றது. அந்த விழாவில் புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தில் மட்டும் பவனியாக எடுத்து வரப்பட்டது. அதன்பின் அந்த கொடிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.