Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொழிற்சங்கம் சார்பில்…. 15 இடங்களில் நடைபெற்ற போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று 15 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் தொகுப்புச் சட்டம் மற்றும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கவேண்டும், தனியாருக்கு வழங்கக்கூடாது என்றும் போராட்டம் நடைபெற்றது. மேலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் மற்றும் நபர் ஒருவருக்கு உணவு தானியம் 10 கிலோ வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

அந்தப் போராட்டம் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் போன்றோர் மத்திய அரசை கண்டித்து பேசியுள்ளனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கம் மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது எல். பி. எப். மாநிலத் துணைச் செயலாளர் இளங்கோ, ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாநில குழு உறுப்பினர் வாகையடி ஐயப்பன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அவரவர் தொழிற்சங்க கொடிகளை கைகளில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு விவசாய சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் கோலப்பன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சைமன்சைலஸ், சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் சந்திரகலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், அகில இந்திய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதைப்போன்று ஈத்தாமொழி, சுங்கான்கடை, முட்டைகாடு, காஞ்சாம்புறம், கருங்கல் என மொத்தம் 15 இடங்களில் தொழில் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Categories

Tech |