வேலன்டைன் வீக்-கின் மூன்றாம் நாளான சாக்லேட் தினம் எப்படி எதனால் கொண்டாடப்படுகிறது என பார்க்கலாம்.
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேலன்டைன் டே என்று அழைப்பர். மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வேலன்டைன் வீக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேலன்டை வீக்கின் 3 வது நாளாக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உங்கள் காதலன்/ காதலியிடம் சாக்லேட் கொடுப்பது, சாக்லேட் உணவு செய்து கொடுப்பது, சாக்லேட் ஓவியங்கள் கொடுப்பது போன்றவை நடக்கும். சாக்லேட் அன்பை அதிகரிப்பதோடு அதனை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மையும் கிடைக்கும்.
- சாக்லேட் உண்பதால் இதயத் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் வராது என்று டி.எம்.ஏ ஆய்வில் தெரியவந்துள்ளது.
- சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் கரையும் என ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷியன் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- மேலும் ஒரு நாளில் 2 முறை சூடான சாக்லேட் சேக் குடிப்பதனால் மூளையின் செயலாற்றல், நினைவாற்றல், அறிவாற்றல் ஆகியவை அதிகமாகிறது.
- சாக்லெட்டில் ட்ரைப்டோஃபன், செரோடின், கஃபைன் போன்ற மூலப் பொருட்கள் இருப்பதால் உடலில் மெல்லிய உணர்வு உண்டாகிறது. இதுவே ரொமாண்டிக் மூட் எனப்படுகிறது.