Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளி மாநிலத்தவர்களை கண்காணிக்க… புதிய அதிகாரிகள் நியமனம்… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை  கண்காணிப்பதற்காக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள் தோறும் நேரில் சென்று அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் சென்னை தொழிலாளர் ஆணையர் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி தொழிலாளர் ஆணையர் பாலசுப்பிரமணி, தொழிலாளர் இணை ஆணையாளர் தர்மசீலன் ஆகியோரின் தலைமையில் அலுவலக தொழிலாளர் உதவி ஆணையர் விமலா, குழு உறுப்பினர்களாக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குருநாதன், முத்திரை ஆய்வாளர் ராஜா ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களைப் கண்காணிப்பதற்கு அதிகாரிகளகாக  நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியாளர் ரத்னா என்பவர் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளை குறித்து கண்காணிப்பு அலுவலர் 9942832724  என்ற எண்ணிலும் குழு உறுப்பினர் 9629494492 , 7904250037 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |