குளிரூட்டிகள் உடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில் கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் புதிய நியூ மேட்சிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் தொலைக்காட்சி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக ஏசி மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுங்கவரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரக்கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில் இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏர் கண்டிஷனர்கள் மட்டும் அதில் பயன்படுத்தப்படும் கிரம்பிரஸ்களில் 90% சீன மட்டும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் இரு நாடுகளின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது.