விபத்தில் இறந்த கணவரின் உடலை மீட்டு தருமாறு பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹர்ஷினி என்ற மகளும், அபினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகர்சாமி மலேசிய நாட்டிற்கு வெல்டிங் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சத்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிறுவனத்தினர் அழகர்சாமி விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து குறித்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் சத்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் வந்த சத்யா விபத்தில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டி மனு அளித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.