Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான வாலிபர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் ஆசாத் நகர் பகுதியில் ஹனீபா ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஹனீபா ராஜா சொந்த ஊரான ஆசாத் நகருக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் ஹனீபா ராஜா கடந்த 16-ஆம் தேதி வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் ஹனீபா ராஜா வீடு திரும்பாததால் அவரது மனைவி செய்யதலி பாத்திமா பதற்றம் அடைந்துள்ளார். இதுகுறித்து செய்யதலி அலி பாத்திமா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன ஹனீபா ராஜாவை தேடி வருகின்றனர்.

Categories

Tech |