Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான்” அதிக கடன் வாங்கிய நாடு…. உலக வங்கி வெளியிட்ட தகவல்….!!

பாகிஸ்தான் நாட்டிற்கு வெளிநாடு வங்கிகளில் அதிகமான கடன் உள்ளதாக உலக வங்கியானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. கொரோனா நோய் காரணமாக பொருளாதார நெருக்கடியை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தவித்து வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் பல வங்கிகளில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏராளமான கடன் இருப்பதாக உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாடு தற்காலிகமாக கடனை ரத்து செய்வதற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் வருடத்திற்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

அதில் வெளிநாடுகளில் உள்ள  வங்கிகளில் அதிக கடன் பெற்ற பத்து நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

1.அங்கோலா

2. வங்காளதேசம்

3.எத்தியோப்பியா

4.கானா

5.கென்யா

6.மங்கோலியா

7.நைஜீரியா

8.பாகிஸ்தான்

9.உஸ்பெகிஸ்தான் மற்றும்

10.சாம்பியா போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்நாடுகள் அனைத்துமே தற்காலிக நடைமுறைக்கு தகுதி பெற்றுள்ளது. 2020-ஆம் ஆண்டு இறுதிவரை இந்த நாடுகளின் மொத்த கடன் இருப்பு 509 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதை 2019-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும். ஆனால் பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரையிலும் வெளிநாடு வங்கிகளில் அதனுடைய கடன் 8 சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது.

Categories

Tech |