வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் தில்லை நகரில் தெய்வம்-சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக வெளியூர் சென்று இருந்தனர். இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தொலைபேசி மூலம் தம்பதியினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து தம்பதியினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சற்குணம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.