Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியே நின்றிருந்த போது… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பெண்ணிடமிருந்தது  தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நந்தகோபாலபுரம் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செந்தமிழ் ஜெயா அமலி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் செந்தமிழ்  ஜெயா அமலி தனது கடையில் இருந்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் வெளியே நின்று கொண்டிருந்த செந்தமிழ் ஜெயா அமலி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்துள்ளனர்.

இதனை அறிந்த செந்தமிழ் ஜெயா அமலி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல்சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் அந்த 2 வாலிபர்களும் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தமிழ் ஜெயா அமலி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிந்த காவல்துறையினர் பெண்ணிடமிருந்து  7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |