அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதிய மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பசும்பலூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் சுரேஷ் துக்கம் விசாரித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்ப சென்றபோது அங்கு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்து உள்ளார்.
அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 15 பவுன் நகை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.