Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளிய தல காட்ட முடியல… இதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் நல்லா இருக்கு…ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சி அடைந்த மக்கள்…!!

தென்காசியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம்  மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்த நாள் முதல் வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே போகவும், வரவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திர பட்டணத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து உள்ளது. இந்த மழையானது சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று பலத்த காற்றினால் முறிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த மழையினால்  சாலையின் ஓரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு தொடர்ந்து அரை மணி பெய்த மழையினால்  வெயிலின் தாக்கம் சற்று குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |