Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற மாற்றுத்திறனாளி…. காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் வள்ளுவர் பூங்கா பகுதியில் கோடி மகன் மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பிறவியில் இருந்தே கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தார். இதில் மணிகண்டன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலை அருகில் கரடு என்ற காட்டுப்பகுதியில் மணிகண்டன் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை பார்வையிட்டனர்.

அப்போது மணிகண்டன் தலையில் யாரோ மர்ம நபர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் மணிகண்டன் வயிறு, கால் மற்றும் கை போன்ற பகுதியில் மது பாட்டிலால் குத்தியதற்கான காயங்கள் இருந்தது. அதன்பின் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடி சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன்பின் காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கிற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவ்வாறு கொலை நடந்த பகுதியில் மதுபானம் கடை ஒன்று இருக்கிறது. ஆகவே கொலையாளியுடன் மணிகண்டன் மது அருந்தி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன் பிறகு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் அடைகின்றனர்.

Categories

Tech |