விவசாய நிலத்தின் வேலியில் சிக்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி – நெல்லை டவுன் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் வேலியில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் வேலியில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டுள்ளனர். அதன்பின் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.