Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வெளியேற்ற வேண்டும்” பொதுமக்கள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வெள்ள நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் தொடர் கனமழை காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்திருக்கும் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இதை அறிந்து வந்த எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலமாக கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. ஆனாலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் விரிவுபடுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |