Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெள்ளரி அறுவடையானது…. ஊரடங்கால் வியாபாரிகள் வாங்க வரவில்லை…. விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

வெள்ளரி அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விற்பனை குறைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை, வெள்ளரி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஜனவரி மாத கடைசியில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டனர். தற்போது மூன்று மாத பயிராக வெள்ளரி பிஞ்சுகள் நன்கு வளர்ந்துள்ளதால் வெள்ளரி அறுவடை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதேபோல் ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் ஒரு கிலோ வெள்ளரி பழம் ரூபாய் 30 முதல் 60 வரையிலும் விற்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வெள்ளரிக்காய்களை வாங்க வராததால் விற்பனை குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் வெள்ளரி விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆங்காங்கே வெள்ளரி விற்பனையில் ஈடுபடும் விவசாயிகளிடம் பொதுமக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்.

Categories

Tech |