Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் மாயமான வியாபாரி…. ஆற்றோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி ஆற்றோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக குபேந்திரன் நடராஜபுரம் தரை பாலத்தை கடக்க முயன்ற போது பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிவராஜபுரம் கானாற்று ஓரத்தில் குபேந்திரன் சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அவரது உடலை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |